• Jul 25 2025

இமேஜ் டேமேஜ் செய்ய சதித்திட்டம்... காட்டுத்தீயாய் பரவிய இமான் விவகாரம்... சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட கெட்ட பெயர்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

காட்டு தீ போல பரவிவருகிறது நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் இமான் விவகாரம். நடிகர் சிவகார்த்திகேயனுடன் இனி படம் பண்ண மாட்டேன் என்ற அதிர்ச்சி தகவலை கூறிய இமான்  தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். இந்த விடயமானது நடிகர் சிவகார்த்திகேயன் பெயரை டேமேஜ் செய்ய நடை பெரும் திட்டம் என்று ஒரு தகவல் வெளியாகிஉள்ளது. 

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் இத்தனை வருடங்களாக சேர்த்து வைத்திருந்த மொத்த பெயரும் டேமேஜ் ஆகும் விதமாக சம்பவம் ஒன்று நடந்தேறி உள்ளது. இசையமைப்பாளர் இமான் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இனி படம் பண்ண மாட்டேன் என்ற அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும் கூறியிருக்கிறார்.இந்த விடையம் சினிமா திரையுலகினர் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பரவி பெரும் கேள்வியை எழுப்பி உள்ளது.


இந்நிலையில் சினிமா விமர்சகர்கள் முதல் பல பிரபலங்களும் சிவகார்த்திகேயன் மீது தவறு இருப்பதாக சுட்டிக்காட்டி பேசி வருகிறார்கள். ஆனால் அவரது ரசிகர்கள் இப்போதுமே சிவகார்த்திகேயன் பக்கம் தான் இருக்கிறார்கள். அதுவும் அவரின் மார்க்கெட்டை உடைக்க தான் இவ்வாறு சூழ்ச்சி நடந்து வருவதாக கூறுகின்றனர்.அதாவது சின்னத்திரையில் இருந்து வந்து தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கிறார். 


அதுவும் அவரது டாக்டர், டான் போன்ற படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் செய்திருந்தது. அதோடு மட்டுமல்லாமல் மிக விரைவில் நீண்ட நாளாக இழுபறியில் இருந்த சிவகார்த்திகேயனின் அயலான் படமும்  வெளியாகிறது. இவ்வாறு ஒரு வளர்ச்சி பாதையை நோக்கி சிவகார்த்திகேயன் சென்று கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் இவ்வாறு பிரச்சனையை கிளப்பி உள்ளார்கள் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 

Advertisement

Advertisement