• Jul 23 2025

அவர் தவறாக செய்யவில்லை- இயக்குநர் மணிரத்னத்தின் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்த நீதி மன்றம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜ், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஜெயராம் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியானது பொன்னியின் செல்வன் படம்.

 இந்தப் படம் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு வெளியான நிலையில், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் மிரட்டியது.இந்தப் படம் இயக்குநர் மணிரத்னத்தில் கனவு ப்ராஜெக்டாக வெளியான நிலையில், மிகவும் அழகுடன் ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படம் வெளியானது.


 லைகாவுடன் இணைந்து மணிரத்னமும் இந்தப் படத்தை தயாரித்திருந்த நிலையில், அவருக்கு இந்தப் படம் சிறப்பாக கைக்கொடுத்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த மாதம் 28ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் இப்படத்தில் வரலாற்றை திருத்துள்ளதாக மணிரத்னத்தின் மீது புகார் அளிக்கப்பட்டதோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. அந்த வகையில் தற்பொழுது கல்கி வரலாற்றை படிக்காத மனுதாரர் வரலாற்றைத் திரித்துள்ளதாக எப்படி கூற முடியும் என்று சென்னை நீதிமன்றம் மனிரத்தினத்திற்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement