• Jul 24 2025

'இன்னும் 3 நாட்களில் அறுவை சிகிச்சை' ; ' நான் மரணிக்கவும் வாய்ப்பு இருக்கிறது' - பாலா உருக்கம்!!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

அஜித்தின் தம்பியாக 'வீரம்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பரவலான அறிமுகத்தைப் பெற்றவர் நடிகர் பாலா. தமிழில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மலையாளத்தில் கலாபம் தொடங்கி பிக் பி, ஹிட் லிஸ்ட், புலி முருகன், லூசிபர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து நடிகர் பாலாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இவரை இயக்குநர் சிறுத்தை சிவா நேரில் சென்று பார்த்தார். இந்நிலையில், நடிகர் பாலா தனது திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.

இதையடுத்து அவர் கூறியதாவது, "எல்லாருடைய பிரார்த்தினையால் மீண்டு வருகிறேன். எனக்கு 2 அல்லது 3 நாட்களில் மிக முக்கிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவிருக்கிறது. 

மரணம் கூட நேரலாம். ஆனால் உங்கள் அனைவரது பிரார்த்தனையால் பிழைத்துக்கொள்ளவும் அதிக வாய்ப்பு இருக்கிறது" என்று கூறினார்.

Advertisement

Advertisement