• Jul 24 2025

அவருக்கு மரியாதை என்றால் என்ன என்றே தெரியாது- நிஹாரிகாவின் விவாகரத்திற்கு இது தான் காரணமா?- கொந்தளித்த சைத்தன்யாவின் தந்தை

stella / 2 years ago

Advertisement

Listen News!

மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணான நிஹாரிகாவும், சைதன்யாவும் விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான தகவல்,  நீண்ட நாட்களாக தெலுங்கு மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் இதனை இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இருவருமே விரும்பி, புரிந்துணர்வுடன் விவாகரத்து செய்ததாக நிஹாரிகா தெரிவித்திருந்தார்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களிடையே என்ன பிரச்சினை என்றும் ரசிகர்கள் கேட்டு வந்தனர். நிஹாரிகா விவாகரத்து விஷயத்தை மிகவும் ஜோவியலாக எடுத்து கொண்டாலும், சைத்தாயா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி,  மன அமைதிக்காக ஆன்மீகம், யோகா போன்ற வற்றில் கவனம் செலுத்த துவங்கினார்.


இவர்கள் இருவரின் விவகாரத்து குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இதுவரை இருதரப்பு குடும்பத்தினரும் விவாகரத்து குறித்து வெளிப்படையாக பேசவில்லை. ஆனால் சைதன்யாவின் தந்தை தன்னுடைய நட்பு வட்டாரத்தில் விவாகரத்துக்கான காரணம் குறித்து  பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சைதன்யாவின் தந்தை தனது நெருங்கிய நண்பர்களிடம் விவாகரத்துக்கான காரணம் என்ன என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. நிஹாரிகா தன்னுடைய மாமனார் உட்பட, வீட்டில் உள்ள பெரியவர்கள் யாருக்குமே ஒரு நாள் கூட மரியாதை கொடுக்காதவர் என்றும், குறைந்த பட்சம் தன் கணவரிடம் கூட  அன்பு காட்டாத பெண் என தெரிவித்துள்ளார். அடிக்கடி கிளப்புகளுக்கும் பப்புகளுக்கும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த அவர், தன் குடும்பத்தைப் பற்றி ஒரு கணம் கூட நினைத்தது இல்லையாம். 


ஆனால் உண்மை என்ன என்பது தெரியாமல் மெகா ஸ்டாரின் ரசிகர்கள், தன்னுடைய மகனை மோசமாக விமர்சித்து வருவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று ஜொன்னலகட்டா பிரபாகர் ராவ் மனம் நொந்து கூறியுள்ளார். தெலுங்கு மீடியாக்களில் இப்படி வெளியாகும் விஷயம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement