• Jul 25 2025

அவர் கிட்ட இந்த விஷயம் பிடிக்கவே பிடிக்காது- கணவர் குறித்து ஜாலியாக பேசிய சன்னிலியோன்- இதெல்லாம் சூப்பராக பண்ணுவாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக இருப்பவர் தான் சன்னிலியோன்.இவர் தமிழில் ஓ மை கோஸ்ட் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் இவருடன் இணைந்து சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை, ஜி.பி.முத்து ஆகியோரும் நடிக்கின்றனர்.ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தரன் குமார் பினணி இசையமைக்கிறார். தீபக் D.மேனன்  இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.


இந்நிலையில் படத்தின் ப்ரமோஷனுக்காக பிரபல சேனல் ஒன்றிற்கு சன்னிலியோன் பேட்டியளித்திருந்தார்.அதில் பல்வேறு சுவாரஸ்ய கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.“டேனியல் குறித்து உங்களுக்கு என்ன பிடிக்கும் ?” என கேட்டபோது, “அவர் மிகவும் வேடிக்கையானவர். வியாபாரத்துக்கு அப்பாற்பட்டவர். குடும்பத்தை நன்றாக கவனத்து கொள்வார் எப்போதும். அவர் எது செய்யும் முன்பும் நாங்கள்தான் முதலில் அவருக்கு. இந்த குணங்கள் அவருக்கு உள்ளன. அவருக்கு அவரது அம்மாவை மிகவும் பிடிக்கும். அவர் அம்மாவின் குழந்தை.” என குறிப்பிட்டார்.

இதேபோல், “டேனியலிடம் பிடித்ததை சொல்கிறீர்கள். அவரிடம் மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயம் என்ன?” என கேட்கப்பட்டபோது,  “ஆம், இருக்கிறது. வேண்டுமென்றே உலர்ந்த பழங்களை சத்தம் வரும்படி வேண்டுமென்றே கடித்து சாப்பிடுவார். அதை மாற்றிக் கொள்ள வேண்டும்” என ஜாலியாக கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement