• Jul 25 2025

பத்துத் தல படத்திலிருந்து நடிகை ப்ரியா சங்கர் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்- வைரலாகும் புகைப்படங்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


 நடிகர் சிம்பு  இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தான் 'பத்து தல'.கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகி வருவதோடு ஏ. ஆர் ரகுமான் இசையமைத்து வருகின்றார்.

மேலும் இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குநர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.


பத்து தல படத்தின்   படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐதராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.


தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நடிகர் கௌதம் கார்த்திக் இந்த படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாக கூறியிருந்தார். தற்போது நடிகை ப்ரியா பவானி சங்கர், பத்து தல படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இயக்குநர் கிருஷ்ணாவுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தையும் ப்ரியா பவானி சங்கர் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement