• Jul 25 2025

AK 62 படத்திற்கு இயக்குநர் அவர்தான்...! உண்மையை போட்டுடைத்த விக்னேஷ் சிவன்..! யார் தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் விக்னேஷ் சிவன் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித்தின் அடுத்த படமான AK 62 படத்தை இயக்க போகிறார் என ஒரு வருடத்திற்கு முன்பே அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தது.

ஆனால் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தொடங்கியிருக்க வேண்டிய இந்த படம் தொடங்காமல் தாமதமாகி வந்தது. அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக AK 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறிவிட்டதாக தகவல் வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி ஆனார்கள்.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்னேஷ் சிவன் AK 62 படத்தை இயக்கப்போவது யார் என்கிற தகவலை கூறி இருக்கிறார்.

இயக்குநர் மகிழ் திருமேனி கெரியரில் ஒரு பெரிய திருப்புமுனையாக அஜித் சாரை இயக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அந்த படத்தை ஒரு ரசிகனாக நானும் பார்த்து ரசிக்க காத்திருக்கிறேன் என விக்னேஷ் சிவன் கூறி இருக்கிறார். 


Advertisement

Advertisement