• Jul 24 2025

இந்த முறையை மாற்றியதே அஜித் தான்- சினிமா ரவுண்ட் டேபிளில் பேசிய ராஜமெளலி- ஆமோதித்த கமல்ஹாசன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோரது நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் ஆர்ஆர்ஆர். இப்படத்தை இயக்குநர் ராஜமௌலி இயக்கியிருந்தார். இதற்காக இவரை ஒட்டுமொத்த உலகமே பாராட்டி வருகிறது.

இந்த ஆண்டு வெளியான ஹாலிவுட் படங்களுடன் போட்டி போடும் அளவுக்கு ஒரு இந்திய படத்தை கொடுத்துள்ள ராஜமெளலி சமீபத்தில் ஃபிலிம் கம்பேனியன் யூடியூப் சேனல் சார்பாக நடத்தப்பட்ட சினிமா 2022 ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி உள்ளார்.


கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ், பிரித்விராஜ், ராஜமெளலி, கெளதம் மேனன் மற்றும் சீதா ராமம் படத்தின் தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த ஆண்டு சினிமா பற்றி பேசினர். இதில், நடிகர் அஜித் பற்றி ராஜமெளலி பேசியதை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ராஜமெளலி பேசுகையில், ஒரு கட்டத்தில், ஹீரோன்னா ஹேண்ட்ஸம்மா இருக்கணும், டை அடித்து விட்டுத் தான் நடிக்கணும் என்கிற பழக்கத்தை தற்போது பல ஹீரோக்கள் மாற்றி வருகின்றனர். ஹீரோவோட தலைமுடி நரைக்க கூடாது என இருந்த  விதியை உடைத்தது நடிகர் அஜித் குமார் தான் என ராஜமெளலி பேசியதை கேட்டதும் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


ராஜமெளலி அஜித் பற்றிய அந்த விஷயத்தை சொன்னதுமே உடனடியாக 'ஆம்' என தலையாட்டி ஆமோதித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான ராஜமெளலி அஜித் பற்றி பேசியதை கேட்ட ரசிகர்கள் இவர்கள் கூட்டணியில் ஒரு ராஜாங்க படம் வந்தால் எப்படி இருக்கும் என கமெண்ட் போட்டு கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement