• Jul 23 2025

சிவகுமார் தலைமையில் பிரமாண்டமாக இடம்பெற்ற... தயாரிப்பாளர் தனஞ்ஜெயனின் இளையமகள் திருமணம்.!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபலமான பல திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும், தமிழ் திரைப்பட ஆக்டிவ் தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளராகவும் செயல்பட்டு வருபவர் டாக்டர். ஜி. தனஞ்ஜெயன். இவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. 


அதில் இவரின் இளையமகள் ஹரிதா- ஆதர்ஷன் நயினார் திருமணம் நேற்றைய தினம் பிரமாண்டமாக நடைபெற்றது. மூத்த நடிகரும், மிகச்சிறந்த பேச்சாளருமான சிவகுமார் தன் குடும்பத்துடன் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு,  மணமகன் ஆதர்ஷனுக்கு தன் கையால் தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.  


அதுமட்டுமல்லாது 'பத்மபூஷன்' கமல்ஹாசனால் முக்கியமான கமிட்மெண்ட் காரணமாக இந்தத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் தன்னுடைய PRO மூலமாக மணமக்களுக்கும், கடந்த மாதம் திருமணம் நடந்த மூத்த மகள் ரேவதிக்கும் மதிப்புமிக்க பரிசை கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.


இவர்களோடு இணைந்து மேலும் பல திரையுலக பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இந்த திருமணத்திற்கு மென்மேலும் பிரம்மாண்டம் சேர்த்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement