• Jul 24 2025

அடுத்த முறை இவர் தான் முதலமைச்சராக வரவேண்டும்- குடும்பத்துடன் தீச்சட்டி எடுத்து மன்றாடிய நடிகர் கஞ்சா கறுப்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!


 ராம், சிவகாசி, சண்டக்கோழி, திருப்பதி, தாமிரபரணி, பருத்திவீரன், அழகிய தமிழ்மகன் திருப்பதி, பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் கஞ்சா கறுப்பு. இதனை அடுத்து இவர் தான் சம்பாதித்த பணத்தை வைத்து படம் ஒன்றை தயாரித்து இருந்தார். ஆனால், படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து இவர் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் கஞ்சா கருப்பு இந்த ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்று தீச்சட்டி எடுத்து வேண்டுதல் செய்து இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. 


அதாவது, நடிகர் கஞ்சா கருப்பு அவர்கள் தன்னுடைய குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தீச்சட்டி எடுத்து இருக்கிறார். பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், எடப்பாடி அவர்கள் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுகிறார்.

அடுத்து அவர் முதலமைச்சராக வரவேண்டும். கூடிய விரைவில் அவருடைய நல்லாட்சி அமையும். அதற்காகத்தான் நான் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் குடும்பத்துடன் அக்னி சட்டி எடுத்து இருக்கிறேன். குடும்பத்துடன் இருக்கும் ஆளுங்கட்சியை பற்றி எல்லோருக்கும் தெரியும். நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. 


கரண்ட் பில், வீட்டு வரி என எல்லாமே அதிகரித்துவிட்டது. விலைவாசி எல்லாம் கூடிவிட்டது. இதற்கெல்லாம் ஒரு நல்ல தீர்வு எடப்பாடி ஆட்சி அமைந்தால் தான். அவருடைய ஆட்சியில் மக்கள் நன்றாக இருப்பார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.


Advertisement

Advertisement