• Jul 25 2025

இதைக்கேட்டு எனக்கு மனசே இல்லை செத்துட்டேன்- ராஜா ராணி சீரியலில் விலகியது குறித்து மனம் திறந்த ரியா

stella / 2 years ago

Advertisement

Listen News!

 விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வந்த 'ராஜா ராணி 2' சீரியலில் சந்தியாவாக நடித்து பிரபலமானவர் ரியா விஸ்வநாதன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த சீரியலில் இருந்து விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இவரை ரசிகர்கள் சந்தியாவாக உடனே ஏற்றுக்கொண்டனர். ரியாவும் இந்த கேரக்டரில் சிறப்பாக நடித்தார். இவர் சமீப காலமாக ஐ.ஏ.எஸ் பயிற்சியில் ரிஸ்க் எடுத்து பல காட்சிகளில் நடித்தார். இந்த சீரியலில் கிட்டத்தட்ட ஓராண்டாக நடித்து வரும் ரியா, திடீரென 'ராஜா ராணி 2' சீரியலில் இருந்து விலகுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவித்தார். இதனையடுத்து அவருக்கு பதிலாக தற்போது ஆஷா கவுடா சந்தியா ரோலில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.


இந்நிலையில் தற்போது 'ராஜா ராணி 2' சீரியலில் இருந்து விலகியது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.அதில் பேசியுள்ள ரியா, ஷுட்டிங் காலை, இரவு பார்க்காமல் நடந்தது. தொடர்ந்து நடிக்க வேண்டியது இருந்ததால் குடும்பத்துடன் நேரம் செலவு பண்ண முடியவில்லை. 

என்னையும் பார்த்துக்கொள்ள முடியவில்லை. இதுனால உடம்ப பார்த்துக்க முடியாம, சமீபத்துல ரொம்பவே வெயிட் போட்டேன். இந்த மாதிரியான காரணங்களால் புரொடக்ஷன்ல பேசி விலகினேன் என தெரிவித்துள்ளார்.


மேலும், சீரியலில் இருந்து விலகுவதாக சொன்ன போது சேனலில் இருந்து எதுவும் கேட்கவில்லை. சொன்னவுடனே ஓகே சொல்லிட்டாங்க என கூறியுள்ளார். இந்த சீரியலுக்கான ஐ.பி.எஸ் டிரெயினிங் போது பல காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்தேன். ஆனா. அது டூப்ன்னு சிலர் சொல்லிட்டாங்க. இதைக்கேட்டு எனக்கு மனசே இல்லை. செத்துட்டேன். நிறைய பேர் கேட்டாங்க ஈசியா இந்த சீரியலை விட்டேன்னு. ஆனா என் கஷ்டம் உங்களுக்கு தெரியாது. இவ்வளவு பெரிய வாய்ப்பை விட்டு வந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.




Advertisement

Advertisement