• Jul 26 2025

அஜித்திற்கு அம்மாவாக நடித்த நடிகை... இப்போ டாப் சீரியலில் ட்ரெண்டிங்கே இவங்கதானாம்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

23 வயதிலேயே இளம் நடிகை ஒருவர் நடிகர் அஜித்துக்கு அம்மாவாக நடித்திருந்தார்.இப்போது உள்ள ஹீரோயின்கள் இதுபோன்று இளமைக்காலத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடிப்பார்களா என்பது சந்தேகம்தான். அப்படி நடித்தால் அதன் பிறகு தங்களுக்கு பட வாய்ப்பு வராது என்ற அச்சத்தில் படங்களை தவிர்த்து விடுவார்கள். 

ஆனால் துணிச்சலாக அந்த நடிகை அஜித்துக்கு அம்மாவாக நடிக்க சம்மதித்தார்.அதாவது கடந்த 2006 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் வரலாறு. இந்தப் படத்தில் அசின், கனிகா மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இதில் அஜித்தின் அம்மாவாக கனிகா காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கனிகா பேசி இருந்தார். அதாவது வரலாறு படத்தின் பாதி சூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் அழைத்து இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறினார்.

 அப்போது என்ன கதாபாத்திரம் என்றெல்லாம் தனக்கு தெரியாது. அதன் பிறகு தான் அஜித்துக்கு ஜோடியாகவும், அம்மாவாகவும் நடிக்க வேண்டும் என்ற விஷயம் தெரிந்தது.அப்போது எனக்கு 23 வயது தான். இந்த சூழலில் எப்படி அஜித்துக்கு அம்மாவாக நடிக்க முடியும் என்று யோசித்தேன். அந்தப் படத்தில் அஜித் முன்று மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். 

ஒரு பெரிய நடிகராக இருந்தும் அந்த கதாபாத்திரங்களாக மாற அவர் போட்ட உழைப்பை நான் பார்த்தேன். அவரிடம் இருந்து கற்றுக்கொண்டு அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தேன் என்று கனிகா கூறியுள்ளார். 

மேலும் அஜித் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என்றும் இருவரும் ஆலோசித்து சில காட்சிகளில் நடித்துள்ளோம் என்றும் கூறியிருந்தார். 

வெள்ளிதிரையில் பட்டையை கிளப்பிய கனிகா இப்போது சின்னதிரையில் எதிர்நீச்சல் தொடரில் ஈஸ்வரியாக கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement