• Jul 25 2025

திருமண நாளில் இசைப்புயல் AR ரஹ்மான் பகிர்ந்த கியூட் போட்டோஸ் !... குவியும் வாழ்த்துக்கள்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த் சாமி மற்றும் மதுபாலா நடிப்பில் வெளியாகி இருந்த 'ரோஜா' திரைப்படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஏ.ஆர். ரஹ்மான். முதல் படத்திலேயே சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான், தொடர்ந்து இசைப்புயலாக திரையுலகை கலக்கி வருகிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்து வேகமாக நகர்ந்து சென்ற ஏ.ஆர். ரஹ்மான், ஹாலிவுட் வரைக்கும் சென்று ஆஸ்கர் விருதினையும் வென்றதுடன் இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருந்தார்.

இசை அமைப்பாளராக அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆன போதும் தொடர்ந்து தனது இசையால் ரசிகர்களை கட்டி போட்டும் வருகிறார். AR ரஹ்மான் இசையில் கடந்த ஆண்டு இரவின் நிழல், பொன்னியின் செல்வன் 1, வெந்து தணிந்தது காடு, கோப்ரா உள்ளிட்ட படங்கள் வெளியாகி இருந்தது. இந்த படங்களில் வரும் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என அனைத்தும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் பெற்றிருந்தது.

இந்த நிலையில், தனது திருமண நாளை முன்னிட்டு மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் AR ரஹ்மான். இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், கடந்த 1995 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி, சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து 28 ஆண்டுகள் ஆன சூழலில், தனது திருமண நாளை முன்னிட்டு மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் AR ரஹ்மான் - சாய்ரா பானு ஜோடிக்கு திருமண நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.தற்போது இந்த புகைப்படம் செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement