• Jul 26 2025

அஜித் மற்றும் இலங்கை தமிழனுக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா கணவர்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக ரிலீஸ் ஆன திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விக்னேஷ் சிவன், நயன்தாரா, சமந்தா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் கடந்தாண்டு ரிலீசாகி வசூலையும் வாரிக் குவித்தது. மேலும் அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை இயக்க கமிட் ஆனார் விக்னேஷ் சிவன். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டிருந்தது.


இப்படத்தின் ஷூட்டிங்  ஆரம்பிக்க இருந்த சமயத்தில், விக்னேஷ் சிவனை அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மகிழ் திருமேனியை கமிட் செய்து அதிரடி காட்டினார் அஜித்.


 அத்தோடு விக்னேஷ் சிவன் சொன்ன கதை திருப்தி அளிக்காததால், அவரை ஏகே 62 படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக சொல்லப்படுகின்றது. அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், விக்னேஷ் சிவன் அடுத்ததாக யாருடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

இந்நிலையில் விக்னேஷ்சிவன் தனது குழந்தையுடன் ஒரு புகைப்படத்தை போட்டு சில கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதாவது அதில் கூறியதாவது...என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி !!!

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது, பாராட்டும் , வெற்றியும் நமக்குக் கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது! என பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவைப் பார்த்த சிலர் அஜித் மற்றும் லைகாவிற்கு பதிலடியா என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement