• Jul 26 2025

" இன்று நீங்கள் கேட்க விரும்பும் இரண்டு உண்மைகள் இங்கே உள்ளன "- நிகாரிக்காவின் வைரலாகும் பதிவு

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

நிஹாரிகா கொனிடேலா ஒரு இந்திய நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார், இவர் முக்கியமாக தெலுங்கு படங்களில் பணியாற்றுகிறார். ஓக மனசு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.


இவர் "பிங்க் எலிஃபண்ட் பிக்சர்ஸ்" என்ற தலைப்பின் கீழ் திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களை தயாரிக்கிறார்.


கொனிடேலா ஒரு நடிகையாக அறிமுகமாகும் முன் தெலுங்கு மொழித் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றினார். ETV நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும் Dhee Junior 1 மற்றும் Dhee Junior 2 ஆகிய பிரிவுகளுக்கு Dhee Ultimate Dance Show ஐ  தொகுத்து வழங்கியுள்ளார்.

மேலும் இவர் தனது பிங்க் எலிஃபென்ட் பிக்சர்ஸ் பேனரின் கீழ் தெலுங்கு வெப்-சீரிஸ் முட்டபாப்பு தொடரைத்  தயாரித்தார். இந்த தொடர் யூடியூப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. செப்டம்பர் 2015 இல், இவர் நடிகையாக அறிமுகமான ஓக மனசு என்ற திரைப்படத்தில் நடித்தமையால் சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான விருதை பெற்றுக்கொண்டார். 2019 ல் வெளிவந்த இவரது ஏனைய திரைப்படங்களான , சூர்யகாந்தம், பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றதுடன் , ₹3 கோடி வரை வசூலித்தது. மேலும் இவர் அந்த ஆண்டின் பிற்பகுதியில் வரலாற்று அதிரடித் திரைப்படமான சைரா நரசிம்ம ரெட்டியில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார்.

இவ்வாறு சினிமாவில் நடிப்பை வெளிப்படுத்தி வரும் நிகாரிக்கா, சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக உள்ளார். அந்த வகையில் தனது புகைப்படங்களையும் படங்களையும் அடிக்கடி பகிர்ந்து கொள்வார். இந்நிலையில் இவர் மழையில் நனையும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் .இந்த வீடியோவானது ரசிகர்கள் பலரால் பார்வையிடப்பட்டடு வருவதனைக் காணலாம் 

Advertisement

Advertisement