• Jul 25 2025

அஞ்சலி பட குழந்தை நட்சத்திரமா இது?- பல வருடங்களுக்கு பிறகு மணிரத்தினத்தின் படத்தில் பணிபுரியும் பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி.ஆரம்ப காலங்களில் மேடை நாடகங்களில் நடித்து வந்த இவர்  சதி லீலாவதி, ஆசை, தளபதி போன்ற படங்களிலும் நடித்திருக்கின்றார்.

இது தவிர சில சீரியல்களிலும் நடித்த இவர்  இயக்குநர் பாலுமகேந்திராவிடம் துணை இயக்குநராக இரண்டு வருடங்கள் பணியாற்றி இருந்தார். கமலின் உன்னை போல் ஒருவன் படத்தில் டையலாக் எடிட்டராகவும், அதே படத்தில் ஒரு டையலாக் ரோலிலும் நடித்து இருந்தார். 


பின்னர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திலும் சூப்பர்வைசிங் சௌண்ட் எடிட்டராகவும் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஓ காதல் கண்மணி படத்திலும் சௌன்ட் டிசைனராகவும் கடமையாற்றி இருக்கின்றார்.தற்போது இவர் பொன்னியின் செல்வன் படத்தில் சவுண்ட் டிசைனர் ஆக பணியாற்றி இருக்கிறார். 

இந்நிலையில் சமீபத்தில் ஆனந்த கிருஷ்ணமூர்த்தி பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், இது வந்து முழுக்க முழுக்க வரலாற்று கதை. வரலாற்றில் எப்படி இருந்தது என்று நமக்கு தெரியாது. எல்லோருமே சேர்ந்து ஒரே ஒரு படத்தை தான் எடுக்க வேண்டும். வேறு வேறு கதை சொல்ல முடியாது. அதுதான் இந்த படத்தில் ஒரு பெரிய விஷயமே. சில நேரம் குதிரைக்கு நாமே மூச்சு விடும் சவுண்டை கொடுக்க வேண்டும்.


சில நேரம் அது மூச்சுவிடும் சவுண்டை நாம் ரெக்கார்ட் செய்ய வேண்டும். இப்படி பல நுணுக்கங்கள் இருக்கிறது. ஒரு டீம் ஓட தான் வேலை செய்ய முடியும். இது ஒருத்தர் செய்யும் வேலை கிடையாது. எல்லோரும் சேர்ந்து பண்ணினால்தான் மிகப்பெரிய வெற்றி. ஒரு புத்தகம் படித்தவர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்று எனக்கு தெரியும். அதேதான் மணி சாரும் யோசித்தார். அந்த கூட்டு முயற்சியின் விளைவாகத்தான் பொன்னியின் செல்வன் உருவாகி இருக்கிறது என்று பல சுவாரசியமான விஷயங்களை கூறி இருக்கிறார்.


மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.






Advertisement

Advertisement