• Jul 23 2025

ரிலீஸிற்கு முன்பே இணையத்தில் கசிந்த 'ஜெயிலர்' படக்கதை... சுருக்கமான திரை விமர்சனம் இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பீஸ்ட் படம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து  எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்த நெல்சனுக்கு அடுத்ததாக கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிரூத் தான் இசையமைக்கிறார்.ஜெயிலர் படத்தில் ரஜினி உடன் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், நகைச்சுவை நடிகர் யோகிபாபு, நடிகை தமன்னா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.


இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது. அந்தவகையில் படம் ரிலீசாக இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் ஜெயிலர் குறித்த அப்டேட்களும், போஸ்டர்ஸ், கிலிம்ப்ஸ் வீடியோக்களும் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் கதை என்ன என்பது குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது ஜெயிலர் படத்தினுடைய கதையின் பிரகாரம் ஒரு கும்பல் தங்கள் தலைவரை சிறையிலிருந்து மீட்க முயல்கிறது, அந்த சமயத்தில் மற்றவர்கள் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள்.


இதில் சிறைச்சாலையில் ஜெயிலராக நடிக்கும் ரஜினிகாந்த், அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினாரா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் உடைய மீதிக்கதையாக அமைந்துள்ளது எனக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement