• Jul 25 2025

ஜனனி பேசும் தமிழ் பிரச்சினைக்குரியது... விக்ரமனால் வெடித்த புது சர்ச்சை... அனல் பறக்கும் ப்ரோமோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி 21 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி தற்போது 7ஆவது வாரத்தை கடந்துள்ளது. இப்போட்டியாளர்களுள்  பலரையும் கவர்ந்த ஜிபி முத்து தனது விருப்பத்தின் பேரில் முதலிலேயே வெளியேறினார்.

எனினும்  இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக சாந்தி வெளியேற்றப்பட்டார். இதன் பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் நிவாஷினி வெளியேற்றப்பட்டார்.

இவ்வாறுஇருக்கையில் , பிக்பாஸ் வீட்டினுள் கோர்ட் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இதன்படி, பிக்பாஸ் வீடானது நீதி மன்றமாக செயற்பட்டு வருகின்றது.


இந்நிலையில் இன்றைய தினத்திற்குரிய முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் அசீம் "உங்கள் தமிழில் பிரச்சினை போல என விக்ரமன் ஜனனி அவர்களை சுட்டிக் காட்டியது மிகுந்த மன வேதனையை அளித்தது" எனக் கூறுகின்றார். 

அதற்கு உடனே குயின்ஷியும், விக்ரமனும் "உங்கள் மொழியில் சிரமமுள்ளதா" என்றே கூறினோம் எனத் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாது விக்ரமன் "அவரது மொழியில் பிரச்சினையே கிடையாது, அந்த செந்தமிழ் பேசுவது எனக்கே தடுமாற்றம் தான்" எனக் கூறுகின்றார்.

இதனைத் தொடர்ந்து ஜனனி "உங்கள் தமிழில் எனக் கூறியது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கின்றது" என ரொம்பவே பீல் பண்ணிய வண்ணம் தெரிவிக்கின்றார். 

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement