• Jul 25 2025

சாப்பிடாமல் அடம் பிடிக்கும் ராபர்ட்..இது தான் விசயமா..அடுத்த டிக்ட் அவுட்டா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த செப்படம்பர் 9ஆம் தேதி ஆரம்பமாகி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.இதில் பிக்பாஸ் ஆரம்பமானது முதலே ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரச்சிதா ஆகியோரிடையே நடைபெறும் உரையாடல்கள் உள்ளிட்ட விஷயங்கள் அதிகளவில் கவனம் பெறும். இதனிடையே, சமீபத்தில் ராபர்ட் மாஸ்டர் கிச்சன் ஏரியாவிலேயே சுற்றி வருவதை குறிப்பிட்டு தனலட்சுமி சில கருத்துக்களை கூறி இருந்தார்.

இதனை ரச்சிதாவும் வழிமொழிய ராபர்ட் மாஸ்டர் அப்செட் ஆனதாக தெரிகிறது.மேலும்  இது பற்றி நேரடியாகவே ராபர்ட் மாஸ்டரிடம் பேச முடிவு செய்த ரச்சிதா, "ஏன் இப்படி அப்நார்மலாக நடந்து கொள்கிறீர்கள்?. நார்மலாக இருங்களேன். அத்தோடு நீங்க என்ன எவ்வளவு கலாய்க்குறீங்க, பதிலுக்கு நான் ஒன்னும் சொல்ல கூடாதா?. ஏன் இப்படி இருக்கீங்க. நீங்க பண்றது குழந்தைத்தனமா இருக்கு. உங்களுக்கு அது தெரியுதா?. ஏதோ எதிரி மாதிரி Behave பண்றீங்க. எதிரில்  இருக்கிறவங்களுக்கு எப்படி இருக்கும் என்று  தெரியுமா?. நீங்க நார்மலா இருங்க" என சொல்லிவிட்டார்.

அதன் பின்னர்  கடந்த ராஜா ராணி டாஸ்கில் ராணி வேஷத்தை ரச்சிதா போட, ராஜா வேஷம் போட்ட ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா கடைசியில் சீக்ரெட் டாஸ்கில் பலருடன் சேர்ந்துகொண்டு தன்னிடம் உண்மையை சொல்லாமல், தன்னை ஏமாற்றி முதுகில் குத்துவிட்டதாக கூறி அழுதார். அத்தோடு ராபர்ட் இப்படி சொன்னதால் ரச்சிதாவும் மனமுடைந்து அழுதார்.இதன் பின்னர், தான் அவ்வாறு சொன்னதற்கு ஜெயிலில் வைத்து ராபர்ட் மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில்தான், ரச்சிதாவின் கான்டாக்ட் நம்பரை ராபர்ட் கேட்டுள்ளார். ஆம், 44வது நாளில் கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்த ரச்சிதா பக்கம் போன ராபர்ட், ‘2 வாரமா நான் உங்கிட்ட போன் நம்பர் கேக்குறேன்.. நியாபகம் இருக்கா?  அசல் போனதுல இருந்து நான் நம்பர் கேக்குறேன்..’ என்று கேட்க, ‘இது ஒரு விஷயம் என இப்படி கேட்டுட்டு இருக்கீங்களே.. நம்பர் சொன்னா நியாபகம் வெச்சுப்பீங்களா? பேப்பர் பேனா இருக்கா?’ என கேட்க, அவரோ, “அதற்கான சூழல் வந்தது நீதான் நம்பர் தரவில்லை” என கூறிவிட்டார். ஆனால் ரச்சிதாவோ, “அச்சோ மறுபடியும் மொதல்ல இருந்து ஸ்டார்ட் பண்ணாதீங்க” என சொல்லிவிட்டு மீண்டும் சமைக்க ஆரம்பித்தார்.

முன்னதாக ‘இதுவரை இல்லாத உணர்விது’ பாடலை ரச்சிதாவை நோக்கி பாடிய ராபர்ட், “பெண்ணை நம்பாதே” என்கிற வரிகளில் முடித்தார். அதாவது ரச்சிதா தன்னுடன் மட்டும் நெருக்கமாக பழகவில்லை, ஆனால் அனைவருடனும் நன்றாக பழகுகிறார் என்பதை ராபர்ட் அந்த பாடல் மூலமாக வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.அத்தோடு அவர் சாப்பிடாமல் அடம் படிக்கிறாராம்.இதனால் அவர் வெளியேற அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. 

Advertisement

Advertisement