• Jul 25 2025

கண்ணீர் விட்டு அழும் போட்டியாளர்கள்... பதிலுக்கு அழுத கமல்... கவலையுடன் வெளியான ப்ரோமோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகளவு ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்டது என்றால் அது 'பிக்பாஸ்' தான். இந்த நிகழ்ச்சியானது 5சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 6ஆவது சீசன் ஒளிபரப்பப்பட்டு உள்ளது. 

அந்தவகையில் 21 பேருடன் ஆரம்பமாகி 60 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக செல்லும் இந்த நிகழ்ச்சியில் வாராவாரம் ஒருவர் வெளியேறிய வண்ணம் தான் இருக்கின்றனர். தற்போது 12 போட்டியாளர்களே எஞ்சி உள்ளார்கள். இவ்வாறு இருக்கையில் நேற்றைய எபிசோட்டில் திடீரென ராம் வெளியேறி இருந்தார்.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் கமல் பெற்றோர்களைப் பற்றிக் கூறுமாறு கேட்கின்றார். அதற்கு மைனா "அவங்க 2பேருமே என் அம்மா அப்பா கிடையாது, அவங்க 2பேருமே என் குழந்தைகள் தான், நிஜமாகவே நான் அவங்கள மிஸ் பண்ணுறேன்" எனக் கூறி அழுகின்றார்.

அதேபோல் அசீம் "வெளிய எவ்வளவு ஸ்ட்ரோங் ஆக இருந்தாலும் நமக்குள்ள அந்த பீல் இருக்கும், அதே எனக்கு எப்போவுமே இருக்கு" எனக் கூறி கண் கலங்குகின்றார். அதேபோன்று கதிரவன் "அவங்க போட்ட அந்தப் பிச்சையில் தான் நான் இங்க இருக்கேன்" எனக் கூறுகின்றார்.

மேலும் கமல் பேசுகையில் "அம்மா, அப்பா பற்றிப் பேசினீர்கள், இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது, இதைத் தெளிவாக சொல்லாமலேயே நாம் அவர்களை இழந்து விடுவோம், அப்படி ஒரு குழந்தை தான் நான், உங்களை பார்க்க பொறாமையாக இருக்கின்றது" எனக் கூறி கண் கலங்குகின்றார். பதிலுக்கு ஷிவினும் விம்மி விம்மி அழுது கண்ணீர் வடிக்கின்றார்.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement