• Jul 24 2025

இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பம்... மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் பிரபலம்... வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

யூடியூப் வாயிலாக மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவரே ஐதராபாத்தை சேர்ந்த அர்மான் மாலிக். அதாவது இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தனது லைஃப் ஸ்டைல் பற்றிய கண்டெண்ட்டுகளை தினசரி பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டவர். 


அந்தவகையில் அர்மான் மாலிக்கிற்கு யூடியூபில் 20 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இதனால் அவர் யூடியூப் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார். இவ்வாறு பிரபலங்களில் ஒருவராக மாறிய அர்மான் மாலிக் கடந்த 2011-ஆம் ஆண்டு பாயல் மாலிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்கு சிராயு மாலிக் என்கிற மகனும் உள்ளார். 


இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு அவரின் மனைவி பாயல் மாலிக்கின் தோழியான கிருத்திகா என்பவருக்கும், அர்மான் மாலிக்கிற்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறிவிட்டது. இதையடுத்து கிருத்திகாவையும் திருமணம் செய்து கொண்டார்.


இதனையடுத்து இரண்டு மனைவிகளுடனும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் அர்மான் மாலிக்கின், சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று தற்போது அனைவரையும் ஷாக் ஆக்கி உள்ளது.

அதாவது அதில் அவர் தனது இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமான தகவலை சந்தோசமாக வெளியிட்டுள்ளதோடு, அவர்களுடன் போட்டோஷூட்டும் நடத்தி அதனை பதிவிட்டுள்ளார்.


இவ்வாறாக இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமான சந்தோஷத்தில் அர்மான் மாலிக் இருந்தாலும், அவரை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

மேலும் கர்ப்பமாக இருக்கும் இரு மனைவிகளுக்கும் முத்தமிட்டவாறு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் அர்மான் மாலிக். 


இவரின் அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம டிரெண்ட் ஆகி வருகின்றன.

Advertisement

Advertisement