• Jul 24 2025

அமுதவாணனை அடிச்ச மணிகண்டன்... உடனே பொங்கி எழுந்த போட்டியாளர்கள்... மாஸாக வெளிவந்த ப்ரோமோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 5ஆவது வாரத்தை நிறைவு செய்ய காத்திருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் இறுதியில் ஒருவர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் ஜி.பி முத்து, சாந்தி, அசல் ஷெரினா ஆகியோர் வெளியேறிவிட்டனர். இந்த வாரம் யார் என்ற கேள்விக் குறியோடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள். 

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு சண்டை, வாய்க்கலப்பு, வாக்குவாதம் என மாறி மாறி இடம்பெற்ற வண்ணம் தான் இருக்கின்றது. அதுமட்டுமல்லாது பிக்பாஸும் இவர்களுக்குள் சண்டையை மூட்டும் வகையில் டாஸ்க்குகளைக் கொடுத்த வண்ணம் தான் இருக்கின்றார். 


இந்நிலையில் இன்றைய தினத்திற்குரிய முதலாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் மணிகண்டனுக்கும், அமுதவாணனுக்கும் சண்டை ஏற்படுகின்றது. அதாவது டாஸ்க் விளையாடும் போது மணிகண்டன் கடுமையாக நடந்து கொண்டதாகவும், அடித்ததாகவும் கூறி அமுதவாணன் வாதிடுகின்றார்.

அதுக்கு உடனே மணிகண்டன் "சத்தியமாக நான் அடிக்கல, எனக்கு உங்களைக் குத்துறதற்கு வேற வேலை இல்லையா, சும்மா பிளேம் பண்ணாதீங்க" எனக் கூறுகின்றார். அதற்கு அமுதவாணன் "உன்னை பிளேம் பண்ண வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கூறுகின்றார். 

இவ்வாறாக இன்றைய நாளுக்குரிய முதல் ப்ரோமோ சண்டையும், சச்சரவுமாக வெளிவந்து இருக்கின்றது. 

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement