• Jul 24 2025

இப்படியா ஆபாசமாக படம் எடுப்பீங்க... ஷாருக்கானை விளாசித் தள்ளும் சிறுமி... தீயாய் பரவும் வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநரான சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் 'பதான்'. இத்திரைப்படமானது வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகிறது. 


இந்தப்படமானது தேசபக்தியை முன்னிறுத்தும் படம் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் இடம்பெற்றுள்ள பெஷாராம் ரங் பாடல் ஆபாசத்தின் உச்சம் எனக் கூறி சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சர்ச்சைகள் கிளம்பின. மேலும் பதான் பாடல் 135 மில்லியன் வியூஸ் கடந்து யூடியூபில் டிரெண்டாகி வருகின்றது.

இருப்பினும் அந்த பாடலில் ஏகப்பட்ட பிகினி உடைகளில் ஒட்டுமொத்த கட்டழகும் பளிச்சென தெரியும் படி தீபிகா படுகோன் படு ஆபாசமாக போஸ் கொடுத்திருப்பது மட்டுமின்றி மோசமான ஸ்டெப்ஸ் போட்டு ஆடியுள்ளது ஆபாசத்தின் உச்சம் என விளாசப்பட்டு வருகிறது.


அதுமட்டுமல்லாது பாஜகவினர் மற்றும் இந்து மத அமைப்பினர் இந்த பாடலுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த பாடலில் காவி நிற பிகினி உடையில் தீபிகா படுகோனும் பச்சை நிறத்தில் பாகிஸ்தானை குறிக்கும் விதத்தில் ஷாருக்கானும் உடை அணிந்து ஆடுவதற்கு எதிராக பல சர்ச்சைகள் தாறுமாறாக வெடித்தன.

இந்நிலையில் தற்போது சிறுமி ஒருவரை வைத்து "பாலிவுட் இயக்குநர்களே, நடிகர்களே நல்ல கதைகளை படமாக எடுங்கள், ஆபாசத்தை இளைஞர்கள் மத்தியில் விதைக்காதீர்கள், அதனால் உங்களுக்கு லாபம் கிடைக்கலாம். ஆனால், பாலியல் ரீதியாக பல தொல்லைகளை பிஞ்சு பெண் குழந்தை உள்பட பலரும் அனுபவிக்கிறோம்" என பேசியுள்ள வீடியோ ஆனது தற்போது வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை இயக்கி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இந்த வீடியோவை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் 'வார்னிங்' கேப்ஷனுடன் வெளியிட்டு இருக்கின்றார். அவரது ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதரவு மற்றும் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.


அதுமட்டுமல்லாது நடிகைகளும், நடிகர்களும் விட்டால் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக முழு நிர்வாணமாகவே நடித்து விடுவார்கள் போல.. அந்த அளவுக்கு ஓடிடியில் ஆபாச படங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், தீபிகா படுகோன் போன்றவர்களே இப்படி எக்ஸ்ட்ரா கிளாமர் காட்டினால் இளம் நடிகைகள் எந்த எக்ஸ்ட்ரீமுக்கு செல்வார்கள் என்றும் சமூக வலைத்தள பக்கங்களில் ட்ரோல்கள் கிளம்பி உள்ளன.


Advertisement

Advertisement