• Jul 24 2025

விஜய்க்கு போட்டியாக களமிறங்கிய TFF வாசன்... வாய் விட்டு மாட்டிக் கொண்டதால் பாதியிலே ஓட்டம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

யூடியூப் மூலமாக மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமான ஒருவரே TFF வாசன். இவருக்கு யூடியூப்பில் பல லட்சம் பாலோவர்கள் உள்ளனர். அந்தவகையில் இவர் பைக் ஓட்டும் வீடியோக்களை பதிவிட்டு யூடியூப் மூலம் சம்பாதித்து வருகிறார். குறிப்பாக அதில் இவருக்கு 33 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களும் இருக்கிறார்கள். 


இந்த அளவு TFF வாசன் ரீச் ஆனதற்கு முக்கிய காரணம் இவர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை அதிகளவில் பதிவிடுவது தான். அதாவது அதிவேகமாக பைக் ஓட்டுவது, கைவிட்டுக்கொண்டு சாகசம் செய்வது என பல்வேறு சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவிட்டு இளைஞர்களை தவறாக வழிநடத்தி வருவதாக இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் மக்களால் முன்வைக்கப்படுகின்றன.


அந்தவகையில் சமீபத்தில் கூட பிக்பாஸ் பிரபலம் ஜிபி முத்துவை பைக்கில் உட்கார வைத்துக்கொண்டு, அதிவேகமாக பைக்கில் சென்ற காரணத்தால் TTF வாசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கேஸ் தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகும்போது கூட ஏதோ விருது வாங்க செல்வது போல் கோர்ட் சூட்டில் வந்து அதை வீடியோவாக வெளியிட்டது மிகவும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது.


இந்நிலையில் இவர் தனது பிறந்தநாளையொட்டி ரசிகர்களை சந்திக்க ஏற்பாடு ஒன்றினை செய்திருந்தார். அப்போது அளவுக்கு அதிகமாக கூடிய ரசிகர்களுடன் செல்பியும் எடுத்து வெளியிட்டிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் விஜய்க்கு போட்டியாக இவ்வாறு செய்து வருவதாக ஒப்பிட்டு பேசி வந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் இதுகுறித்த கேள்வி TTF வாசனிடம் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் "ஏன் நானெல்லாம் விஜய்க்கு போட்டியாக இருக்கக்கூடாதா" என கேட்டுள்ளார். 


இப்படி வசமாக வாய்விட்டு மாட்டிக்கொண்ட TTF வாசனை விஜய் ரசிகர்கள் விட்டு வைப்பார்களா..?, அவரைக் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அந்த பேட்டியில் தொடர்ந்து அவர் செய்துவரும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டதால் பதிலளிக்க முடியாமல் திணறிய TTF வாசன், அதிலிருந்து பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டார் எனவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement