• Jul 26 2025

மயில்சாமியின் இறுதி ஊர்வலம்... மலை போல் குவிந்த மக்கள்.. கண் கலங்க வைத்த வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மாரடைப்பால் நேற்றைய தினம் மரணமடைந்த நடிகர் மயில்சாமியின் உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.


இதனைத் தொடர்ந்து தற்போது அவரது உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பிரபலங்களும், ரசிகர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டு மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


மேலும் மயில்சாமி தீவிர சிவ பக்தர் என்பதால், அவரது இறுதி ஊர்வலம் சிவ வாத்தியங்கள் முழங்க நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை வட பழனியில் உள்ள ஏ.வி.எம் மயானத்தில் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது. அந்தவகையில் மயில்சாமியின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் தெருக்கள் எங்கும் மக்கள் திரண்டு நின்று அவரது உடலுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement