• Jul 25 2025

நடிகர் சூரியின் உருக்கமான பதிவு... இறைவன் தான் ஆறுதலாக இருக்க வேண்டும்....

ammu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சூரி மயில்சாமியின் மரண சடங்கிற்கு சென்றிருந்தார். அவர் மயில்சாமி குறித்து "மயில்சாமி அண்ணன் ஒரு சிறந்த நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு சமூக சேவகர். தன்னுடைய வருமாணத்திற்கு மீறி, தன்னுடைய சக்திக்கு மீறி மற்றவர்களுக்கு உதவி செய்ய கூடியவர்" என்று கூறியிருந்தார். 


மேலும் அவர் எந்த வீட்டில் ஒரு நல்ல விஷயமோ, ஒரு கெட்ட விஷயமோ முதல் ஆளாக சென்று கடைசி வரை நின்று அதை நடத்தி குடுத்து விட்டு செல்லும் ஒரு நல்ல மனுஷன் அது அவருக்கு மேலே உள்ள ஆளாக இருந்தாலும் சரி அவரை விட கீழே உள்ள ஆளாக இருந்தாலும் சரி அவர் பாகு பாடு பக்க மாட்டார்.


அவரின் இழப்பு ஒரு பெரிய இழப்பு தான் மயில்சாமி அண்ணனின் மனைவியிற்கும், பிள்ளைகளுக்கும் இறைவன் தான் ஆறுதலாக இருக்க வேண்டும். 


இவரின் ஆத்மா சாந்தி அடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். இவருடன் பயணித்த நாட்கள் மறக்கவே முடியாது. இப்படி ஒரு மயில்சாமி இனி வரவும் முடியாது என்று கண் கலங்கிய படி கூறியிருந்தார்.


Advertisement

Advertisement