• Jul 25 2025

மொத்த வீடே எதிர்த்த போதும் கலங்காத அசீம்.. இறுதியில் தனியாக நின்று இப்படிக் கதறி அழுகிறாரே.. ப்ரோமோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5சீசன்களை வெற்றிகரமாக கடந்துவிட்ட நிலையில், தற்போது இதன் 6ஆவது சீசனானது 100 நாட்களை கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் யார் டைட்டிலை வெல்லப்போகின்றார் என்பதை அறிந்துகொள்ள பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

மேலும் தற்போது பிக்பாஸ் வீட்டில் வாழ்ந்த நாட்கள், செஞ்ச டாஸ்க் என்று... அவை குறித்த நினைவுகளாக அதன் பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கின்றது. அதுமட்டுமல்லாது ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் பிக்பாஸ் தனித்தனியாக வாழ்த்துக்களை கூறி வருகின்றார்.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் அசீம் பற்றி பிக்பாஸ் கூறுகையில் "இந்த மொத்த வீடும் எதிர்த்து நின்ற போதும் துளி கூடப் பயப்பிடாமல் இந்த பிக்பாஸ் வீட்டை முழுமையாக விலையாடி மக்கள் மனதை வென்றிருக்கின்றீர்கள், மனதில் நிறைய சோகம் இருந்தால் வெளியில் நிறைய கோபம் இருக்கும் என்பார்கள், அந்த சோகங்கள் எல்லாம் தீர்ந்து ஒரு புது வாழ்க்கையை நோக்கிப் பயணிக்க வாழ்த்துக்கள்" எனக் கூறுகின்றார்.


இதனைக் கேட்டதும் அசீம் கை எடுத்துக் கும்பிட்டுக் கதறி அழுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!  


Advertisement

Advertisement