• Jul 24 2025

அப்பாவுடன் இலங்கைக்கு இன்பச்சுற்றுலா சென்றுள்ள வரலட்சுமி சரத்குமார்- வைரலாக வரும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி பிரபல நடிகராக வலம் வருபவர் சரத்குமார். இவர் நடித்த சூர்யவம்சம், நாட்டாமை, நட்புக்காக உள்ளிட்ட படங்கள் எவர்க்ரீன் க்ளாசிக் படங்களாக கொண்டாடப்படுகின்றன


அண்மையில் இவர் வானம் கொட்டட்டும், பொன்னியின் செல்வன், வாரிசு ஆகிய படங்களில்  நடித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் சரத்குமார், பெரிய பழுவேட்டரையராக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.தற்போது தி ஸ்மைல் மேன், பரம்பொருள் & நிறங்கள் மூன்று ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவராகவும், பொறுப்புகளைக் கொண்டிருக்கும் சரத்குமார் நடிகர் சங்கத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறார். மேலும் தென்காசி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.


இந்நிலையில் சரத்குமார் குடும்பத்துடன் இலங்கையின் கொழும்பு நகரில் சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள சுதந்திர சதுக்கத்தில் பள்ளிக் கல்லூரி மாணவிகளுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்‌. அப்போது சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமாரும் உடன் இருந்தார்.இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement