• Jul 25 2025

நிகழ்ச்சியில் வெடித்த சண்டை.. பாதியிலே வெளியேற முடிவெடுத்த ரேஷ்மா, தனலட்சுமி.. ப்ரோமோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனங்களை கவர்ந்த பல நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பு செய்து வருகின்ற ஒரு சேனல் தான் விஜய் டிவி. அதுவும் இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களிற்கு என்று ஒரு கூட்டாமே உண்டு. 

அந்த வகையில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ 'தான் கலக்கப் போவது யாரு சாம்பியன் சீசன் 4 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. 


இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இந்த வாரத்திற்கான 2ஆவது ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில் தனலட்சுமி நிஷாவைப் பார்த்து "நிஷாக்கா நீங்க ஏன் அப்படி சொன்னீங்க" எனக் கேட்கின்றார். அதற்கு நிஷா "நான் தனியாக உங்கள குறிப்பிட்டு hurt பண்ணல" எனக் கூறுகின்றார்.


அதற்கு தனலட்சுமி "இல்லை நீங்க hurt தான் பண்ணினீங்க" எனக் கூறுகின்றார். அதற்கு நிஷா 'அவங்க வாய்ஸ் அப்படி இருக்குன்னு நீங்க என் மூஞ்சியைத் தானே சொன்னீங்க" என்கிறார். மேலும் தனலட்சுமி "என்னையை சொன்னால் எல்லாரும் சிரிப்பீங்க என்பதற்காக சொன்னீங்களா" எனக் கேட்கின்றார். அதற்கு ஆமா என நிஷா கூறுகின்றார்.

பின்னர் தனலட்சுமி மரியாதையை விட்டிட்டு எல்லாம் என்னால இங்க இருக்க முடியாது என்கிறார். அதற்கு பாலா வெளியபோறீங்களா சரி போங்க எனக் கூறுகின்றார். தனலட்சுமியும் கோபித்துக் கொண்டு எழும்புகின்றார். பின்னர் அது ப்ராங் எனத் தெரியவருகின்றது.


இதனையடுத்து என்ன பிராங் பண்ணுறீங்களா எனக் கேட்டு கோபத்தில் எழும்புகின்றார் ரேஷ்மா. இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது. 


Advertisement

Advertisement