• Jul 25 2025

வெறித்தனமாக வெளிவந்த 'லியோ' படத்தின் Fan Made டிரைலர்... அனல் பறக்கும் வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்து வருகின்றார். மேலும் சஞ்சய் தட், கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலரும் நடித்து வருகின்றனர். 


இவ்வாறாக இப்படத்தில் நடிகர்கள் பலரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  அத்தோடு இப்படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.


அந்தவகையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்திற்காக விஜய் பாடிய 'நான் ரெடி' பாடலின் ப்ரோமோ வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து நேற்றிரவு 12மணிக்கு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.


இந்நிலையில் லியோ படத்தின் Fan Made டிரைலர் ஒன்று விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவரினால் தயார் செய்யப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அனல் பறக்கும் விதமாக மாஸாக அமைந்திருந்த இந்த Fan Made டிரைலர் தான் இந்தியாவில் அதிகமாக பார்க்கப்பட்ட Fan Made டிரைலர் வீடியோ எனவும் கூறப்படுகிறது. 

அந்த வகையில் தளபதி ரசிகர் தயாரித்த இந்த வீடியோவை லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஷேர் செய்து அந்த குறித்த நபருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது.  


Advertisement

Advertisement