• Jul 24 2025

வெளியானது நாக சைதன்யா ஹீரோவாக தமிழில் தடம் பதிக்கும் 'கஸ்டடி' படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது 'கஸ்டடி' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படமானது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ளது. இதில் ஹீரோவாக சமந்தாவின் முன்னாள் காதலனும், கணவனுமான நாக சைதன்யா நடித்துள்ளார். இதன் வாயிலாக இவர் தமிழிலும் தற்போது ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். 


இப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அத்தோடு ஸ்ரீனிவாச சித்தூரி இப்படத்தை தயாரித்துள்ளார்மேலும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் 'கஸ்டடி' படமானது மே மாதம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.


அந்தவகையில் தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது முதல் சிங்கிள் குறித்த அறிவிப்பையே 'வெங்கட் பிரபு கைது' என வித்தியாசமான ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு ரிலீஸ் செய்த நிலையில், தற்போது Head up High என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement