• Jul 25 2025

மணிரத்னம் டைரக்‌ஷனில் விஜய், அஜித்..வெளியான தகவலால் ஷாக்கடைந்த ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முக்கிய இரு துருவமாக திகழ்பவர்கள் தான் விஜய் மற்றும் அஜித்.இவர்கள் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பு பெற்று வசூலிலும் அள்ளிக்குவித்து வருகின்றது.

இவர்கள் இருவரும் இப்படி நடித்து வரும் நிலையில் இவர்களின் ரசிகர்கள் இரண்டு குழுவாக பிரிந்து போட்டி போட்டு வருகின்றனர்.ஆனாலும் வெளியில் அஜித் மற்றும் விஜய் சண்டைக்காரர்களாக திகழ்ந்தாலும் நிஜத்தில் இருவரும் நண்பர்களே.அதற்கு சிறந்த உதாரணம் அண்மையில் அஜித்தின் தந்தை இறந்தபோது அவரின் வீட்டிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வந்தார் விஜய்.

இவ்வாறுஇருக்கையில்  இவர்கள் இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பதாக தகவல் வந்த நிலையில் சினிமா விமர்சகர்கள் இதற்கு வளிக்கம் கொடுத்துள்ளனர்.

அதாவது அந்த செய்தி வந்தது உண்மை தான் ஆனால் தற்போது இல்லை.அது பழைய செய்தி.நேருக்கு நேர் படம் ரிலீசாகும் போது மணிரத்னம் தயாரிப்பில் நடித்தார்கள்.

அதுவும் அவரின் இயக்கத்தில் இல்லை.அவரின் தயாரிப்பில் என்று தான் வெளிவந்தது.ஆனால் ரசிகர்களுக்கு இந்த எதிர்பார்ப்பு இருந்தாலும் இது நிஜத்தில் சாத்தியம் அற்றது என்று கூறியுள்ளார்.அதாவது இரண்டு பேரும் வெவ்வேறு இடத்தில் இருக்கிறார்கள்.இருவரும் இணைந்து நடிப்பதற்கு ஒரு போதும் சாத்தியம் அற்றது எனக் கூறியுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் ராம்சரண் மற்றும் என்.டி.ஆர் இருவரும் நடித்து இருந்தாலும் அவர்களைப் போல விசால மனசு இல்லை எனக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement