• Jul 24 2025

குழந்தை இல்லை என்பதை குத்திக் காட்டிய சகோதரி..? நீயா நானா ஷோவில் கண்கலங்கியபடி அக்கா மேல் குற்றச்சாட்டு... வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முக்கிய விவாத நிகழ்ச்சியான 'நீயா நானா' ஷோ ஆனது கடந்த 10 ஆண்டுகளாக ரசிகர்களை  பல விதத்திலும் கவர்ந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளில் இந்த ஷோவை தொகுப்பாளர் கோபிநாத் நடத்தி வருகிறார். 

சமூகத்திற்கு தேவையான பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்படுவதால் இந்த ஷோவிற்கு என்று ஏராளம் ரசிகர்கள் உண்டு. அந்தவகையில் இதில் மாறுப்பட்ட குடும்பத்தில் திருமணம் செய்த அக்கா - தங்கைகளின் சில சோகமான அனுபவக்கதைகள் பற்றிப் பேசப்படுகின்றது.


இந்நிலையில் அதில் ஒரு பெண் கூறுகையில் "என்னுடைய அக்காவிற்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. ஆனால் ஒரு நாள் பண்ணவில்லையென்றால் ஏன்? என கேட்பேன். அதற்கு நான் இரண்டு குழந்தைகளை வைத்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் என கூறுவார். இந்த விடயம் ஆனது எனக்கு குழந்தையில்லை என்பதனை குற்றி காட்டுவது போல் ஒவ்வொரு நிமிஷமும் இருக்கும் எனக் கூறியுள்ளார்.


இதற்கு அவரின் அக்கா பதிலளிக்கையில் "நான் இந்த மாதிரியான அர்த்தத்தில் சொல்லவில்லை" சமாளித்துக் கூறியுள்ளார். இதனை ஒப்புக் கொள்ளாத தொகுப்பாளர் கோபிநாத்,“எப்படி நீங்கள் சொன்னாலும் தவறு தவறு தானே ...' எனக் கூறி அவர்களுக்கு அந்த தவறை புரிய வைத்துள்ளார். இதுகுறித்த வீடியோ ஆனது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement