• Jul 24 2025

ராஷ்மிகாவுடன் செல்ஃபி எடுக்க வந்த ரசிகரை தள்ளிவிட்ட நபர்... வெளியானது வீடியோ... கோபத்தில் ரசிகர்கள்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ராஷ்மிகா தற்போது இந்திய அளவில் பாப்புலர் ஆன ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். அதுமட்டுமல்லாது நேஷ்னல் கிரஷ் என அவரை ரசிகர்கள் குறிப்பிடுவதும் உண்டு. அந்த அளவுக்கு அவர் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். இந்நிலையில் நேற்றைய தினம் ராஷ்மிகாவின் பாடிகார்டு செய்த ஒரு விடயமானது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.


அதாவது நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆன் அனந்த் தேவர்கொண்டா மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் 'பேபி' படத்தினுடைய பாடல் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ராஷ்மிகா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 


இந்த பாடல் வெளியீட்டு விழா முடித்து ராஷ்மிகா திரும்பிச்செல்லும் வழியில் ரசிகர்கள் பலரும் அவரை சூழ்ந்துகொண்டனர். அந்த சமயத்தில் ரசிகர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றிருக்கின்றார். அப்போது ராஷ்மிகாவின் பாடிகார்டு ஒருவர் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து ஓரமாக தள்ளிவிட்டார். 


இதனை பார்த்த ராஷ்மிகா அவரிடம் பதற்றமாக ஏதோ ஒன்றை சொல்கிறார். இதனையடுத்து ஒரு பெண் அவருடன் புகைப்படம் எடுக்க பின்னால் வந்துகொண்டிருப்பதை கவனித்த ராஷ்மிகா அவசர அவசரமாக ஃபோட்டோ எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி செல்கின்றார். ராஷ்மிகாவின் பாடிகார்டு செய்த இந்த செயலிற்கு ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement