• Jul 26 2025

குழந்தையுடன் இணைந்து திருமணநாளைக் கொண்டாடிய நவீன்-கண்மணி தம்பதியினர்... வைரல் வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகளை தாண்டி தொகுப்பாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்களுக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் தன்னுடைய அழகாலும் குறுகுறு பார்வையாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் செய்தி வாசிப்பாளரான கண்மணி.


அந்தவகையில் முதலில் ஜெயா டிவியில் தன்னுடைய நியூஸ் ரீடர் பயணத்தை தொடங்கிய கண்மணி, பின்னர் நியூஸ்18, காவிரி போன்ற பல செய்தி நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். இதனையடுத்து தற்போது இவர் சன் டிவியில் நியூஸ் ரீடர் ஆக பணியாற்றி வருகிறார். 


பின்னர் கண்மணி கடந்த ஆண்டு, தன்னுடைய காதலரும் இதயத்தை திருடாதே சீரியல் மூலம் பிரபலமான நடிகர் நவீனை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் கண்மணி தனக்கு குழந்தை பிறந்த விஷயத்தை தெரிவித்து இருந்தார். 


இந்நிலையில் நேற்றைய தினம் இந்தத் தம்பதியினர் தமது திருமண நாளை தமது குழந்தையுடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இது குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது. இந்தத் தம்பதியினருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


Advertisement

Advertisement