• Jul 25 2025

ராம் சரணுக்கு மட்டும் பேபி தோசை- பிரபல நடிகர்களுக்கு தோசை சுட்டுக் கொடுத்த சிரஞ்சீவி- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


இந்திய திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதியாக இருப்பவர் தான் சிரஞ்சீவி. இவரது இயற்பெயர் கோணிடில சிவா சங்கர வர பிரசாத் ஆகும்.இவர் 1978-ம் ஆண்டு திரையுலகிற்குள் நுழைந்தவர், தற்போது தெலுங்கு சினிமாவின் மேகா ஸ்டார் என போற்றப்படுபவர். இவர் ஏறக்குறைய 150க்கு மேல் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்பொழுது தமிழில் அஜித் நடிப்பில் வௌியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படமான வேதாளம் திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்து வருகின்றார். போலோ ஷங்கர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் தமன்னா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த வருகின்றனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அண்மையில் கூட இப்படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ருந்தார்.

இப்படியான நிலையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிரஞ்சீவி தன்னுடைய மகன் மற்றும் சகோதரர்களின் மகன்களுக்கு தோசை சுட்டுக் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருவதையும் காணலாம்.அதில் அவர் தன்னுடைய மகனான சரண் பேபி அதான் அவருக்கு பேபி தோசை சுட்டிருக்கிறேன் என்று சொல்கின்றார். இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement