• Jul 26 2025

ஸ்ருதிஹாசனிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்த பொங்கல் பண்டிகை... இதோ அவரே கூறிய அந்த விஷயம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். அதுமட்டுமல்லாது இவர் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் அதிக படங்களில் நடித்துக் கொண்டு இருந்தபோதே திடீரென சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கிய இவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்ததைத் தொடர்ந்து தற்போது படங்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் இவர் கூறிய விடயம் ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது "எனக்கு மறக்க முடியாத பண்டிகை என்றால் அது இந்தப் பொங்கல் தான். குறிப்பாக பண்டிகை என்றாலே எனக்கு மகிழ்ச்சிதான். அதுவும் நான் நடித்த இரண்டு தெலுங்கு படங்கள் பொங்கலில் வெளியாவது, இரட்டிப்பு மகிழ்ச்சி" எனக் கூறி இருக்கின்றார்.


அதுமட்டுமல்லாது "அதுவும் இரண்டு பெரிய கதாநாயகர்களோடு நடித்த படங்கள் வெளியாவது எனக்கு கிடைத்த ஆசீர்வாதம் என்றுதான் நினைக்கிறேன். வெற்றி தோல்வி என்பதெல்லாம் ரசிகர்களின் கையில்தான். அந்த விஷயத்தில் நான் பதற்றம் அடையமாட்டேன்" எனவும் கூறி இருக்கின்றார். இவர் கூறிய இந்த விடயமானது தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.


Advertisement

Advertisement