• Jul 26 2025

உண்மையில் பொங்கல் வின்னர் வாரிசா? துணிவா?- 5வது நாளின் வசூல் விபரம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த வருட பொங்கல் விருந்தாக விஜய் நடிப்பில் வாரிசு அஜித் நடிப்பில் துணிவு உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி நேருக்கு நேராக மோதிக்கொண்டன.கடந்த ஜனவரி 16ம் தேதி வெளியான இந்த இரண்டு படங்களும் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

இருந்த போதிலும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே இடையே பொங்கல் வின்னர் யார் என்ற பஞ்சாயத்து தொடர்ந்து நடந்து வருகிறது.இப்படியான நிலையில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இரண்டு படங்களுமே பிளாக் பாஸ்டர் வெற்றி தான், உங்களது அருகில் உள்ள தியேட்டருக்கு சென்று படத்தை கண்டு களியுங்கள் என பதிவு செய்தது.


முதல் நாளில் இருந்து துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரிசு படத்தை விட அதிகமாக குவித்தது.வாரிசு சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் துணிவு படத்தை விட சில கோடிகள் வித்தியாசத்தில் பின்தங்கி இருந்தது.

இந்நிலையில், 5 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், துணிவு ரூ. 65 கோடி தமிழகத்தில் வசூல் செய்துள்ள நிலையில், வாரிசு படமும் ரூ. 63 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement