• Jul 25 2025

மலையக குயிலான அசானிக்கு கிடைத்த கெளரவம்! ரசிகர்களை சிலிர்க்க வைத்த காணொளி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் அட்டகாசமாக இடம்பெற்று வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது  பரபரப்பான கட்டடத்தை நெருங்கியுள்ளது.

இதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களுள் மலையகத்தை சேர்ந்த அசானியும் ஒருவர். இலங்கையில் மட்டும் அல்லாமல் சரிகமப நிகழ்ச்சியில் கூட நாளுக்கு நாள் அசானிக்கு இருக்கும் ஆதரவு பெருகி வருகின்றது.


இந்த நிலையில், அண்மையில் தனது நண்பியின் ஊரான கடலூர் என்ற  கிராமத்திற்கு சென்ற அசானிக்கு மேளதாளத்துடன்  சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மலையக குயிலான அசானி தன் ரசிகர்களுக்காக பாடிய 'ராசாவே உன்ன நம்பி' என்ற பாடல் தற்போது வைரலாகி வருகின்றது.


இதேவேளை, கடந்த வாரம் இடம்பெற்ற சரிகமப நிகழ்ச்சியில் அவரது அம்மா மேடைக்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


 

Advertisement

Advertisement