• Jul 25 2025

இந்தியில் ரீமேக்காகும் லவ் டூடே.... ஹீரோ யாருன்னு தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

லவ் டுடே திரைப்படம் இந்தி மொழியில் ரீமேக்காக உள்ள தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஜெயம் ரவியின் கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக தடம் பதித்தவர் பிரதீப் ரங்கநாதன்.அத்தோடு  இரண்டாவதாக லவ் டுடே படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அந்தப் படத்தின் மூலம் நடிகராகவும் என்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார்.

இதில்  ராதிகா, சத்யராஜ், யோகி பாபு என பலர் நடித்திருந்தனர். காதலர்கள் தங்களின் செல்போன்களை மாற்றிக் கொண்டால் எப்படி இருக்கும் என்பதை அழகாய் காட்சிப் படுத்தியிருந்தார் பிரதீப் ரங்கநாதன். பாஸிட்டிவ் விமர்சனங்களை குவித்த இந்த திரைப்படம் வசூலை வாரிக் குவித்தது. பிளாக் பஸ்டர் ஹிட்டான இப்படத்தின் மூலம் பெத்த லாபத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ்.

பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வேட்டையாடியிருந்தது லவ் டுடே திரைப்படம். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். லவ் டுடே திரைப்படத்திற்கு தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மொழியில் பாராட்டுக்கள் குவிந்தனர். தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்ட லவ் டுடே திரைப்படத்தையும் பிரதீப் ரங்கநாதனை கொண்டாடி தீர்த்தனர்.

இவ்வாறுஇருக்கையில்  லவ் டுடே திரைப்படம் இந்தியிலும் ரீமேக் ஆகவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில் ரீமேக் ஆகவுள்ள லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் படத்தில் ஹீரோயின் யார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும் பாலிவுட்டில் ரீமேக் ஆகும் லவ் டுடே திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளரான போனி கபூர்தான் தயாரிக்கவுள்ளாராம்.

போனி கபூர் இந்தி படங்கள் மட்டுமின்றி தமிம் மற்றும் தெலுங்கு படங்களையும் தயாரித்து வருகின்றார். நேர்கொண்ட பார்வை, வலிமை, நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களை தயாரித்துள்ள போனி கபூர் தற்போது அஜித்தின் துணிவு படத்தை தயாரித்துள்ளார். மேலும் இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இவ்வாறுஇருக்கையில் தமிழில் வெளியாகி சக்கைப் போடு போட்ட லவ் டுடே திரைப்படத்தையும் போனி கபூர் தயார்க்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement