• Jul 25 2025

வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை உளறிய ராஷ்மிகா மந்தனா- அப்போ ஜனவரி 12' இல்லையா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார்.

இப்படத்தில் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் அப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வாரிசு படத்தை தமிழ்நாட்டில் செவன் ஸ்கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது. அந்நிறுவனம் தான் தற்போது தமிழ்நாடு முழுக்க அப்படத்தின் ப்ரமோஷன் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.


மேலும் இப்படத்தில் விஜய் உடன் ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ்ராஜ், சரத்குமார், ராதிகா, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். அத்தோடு  படத்தின் சென்சார் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் ரிலீஸ் தேதியை படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

அதே போல வாரிசு உடன் மோதும் துணிவு படத்தின் ரிலீஸ் தேதியும் இன்னும் அறிவிக்கப்படாமல் தான் இருக்கிறது.இந்நிலையில் வாரிசு படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா இன்ஸ்டா லைவ்வில் ரசிகர்களுடன் சற்று முன்பு உரையாடினார். வாரிசு ரிலீசுக்கு இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அவர் super exciting ஆக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.


வாரிசு படம் ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது, அது உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் எனவும் கூறி இருக்கிறார் இது ரசிகர்களை குஷியடையச் செய்துளள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement