• Jul 25 2025

ஹவுஸ்மேட்ஸ் தான் படுத்திறாங்க என்றால் நீங்க வேறயா? அசீம்-க்காக சர்ப்ரைஸாக வந்த Guest.. அவரை வச்சே Fun பண்ணிட்டாங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகின்றார்.இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

இதுவரை மைனா நந்தினி ஏடிகே ,ஷிவின், விக்ரமன், மணிகண்டன் ஆகியோருக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் வருகை தந்திருந்தார்.இப்படி பிக்பாஸ் வீடு கலகலப்புடனும் நெகிழ்ச்சியான சம்பவங்களுடன் நிறைந்துகொண்டிருக்கின்றது. இந்நிலையில், புதிய அன்ஸீன் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.


அதில், அசீமின் நண்பர்கள் அவரைக் காண பிக்பாஸ் வீட்டுக்குள் வருகின்றனர். அவர்களை கண்டதும் அனைவரும் எழுந்து செல்ல திடீரென அசீம் மட்டும் Freeze-ல் இருக்குமாறு சொல்கிறார் பிக்பாஸ். இதனால் புன்னகையுடன் அவர் மீண்டும் தனது இருக்கையில் அமர்கிறார். பின்னர் கிச்சன் பகுதியில் அசீம் மீது அவரது குடும்பத்தினர் ஸ்னோ அடிக்க, சக போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகமாக ஆராவாரம் செய்கின்றனர்.

அப்போது, Freeze மோடில் இருந்து அசீமை ரிலீஸ் செய்கிறார் பிக்பாஸ். அதன் பின்னர் கார்டன் பகுதியில் அனைவரும் பேசிக்கொண்டிருக்க திடீரென அசீமை நீச்சல் குளத்திற்குள் தள்ளிவிடுகின்றனர் அவரது விருந்தினர். இதனை பார்த்து, அனைவரும் புன்னகைக்கின்றனர். இந்த வீடியோவால் இன்றைய எபிசோட் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.



Advertisement

Advertisement