• Jul 24 2025

துணிவு படத்தின் ரிலீஸ் உரிமையைத் திடீரென கைப்பற்றிக் கொண்ட வாரிசு பட தயாரிப்பாளர்- இது என்ன புது டுவிட்ஸ்டாக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது .

மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு தைமாதம் 11ம் திகதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தல் வெளியாகி விட்டது. மேலும் விஜய்யின் வாரிசு திரைப்படம் 12ம் திகதி வெளியாகவுள்ளது.


இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.அத்தோடு துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்களுக்கு சம அளவில் தியேட்டர்கள் வழங்கப்படும் என்று ன உதயநிதி ஸ்டாலின் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு 'வாரிசு தான் நம்பர் 1 ஸ்டார், அவருக்கு தான் அதிகம் தியேட்டர் கொடுக்கணும்' என கூறி இருக்கிறார்.

அது பற்றி உதயநிதியை சந்தித்து பேச இருப்பதாகவும் கூறினார்.தமிழ்நாட்டில் அமைச்சராக இருக்கும் உதயநிதி தனது அதிகாரத்தை துணிவுக்கு ஆதரவாக மற்றும் வாரிசு படத்திற்கு எதிராக பயன்படுத்துகிறார் என ஏற்கனவே விமர்சனம் இருந்து வரும் நிலையில் தில் ராஜு பேசியது பரபரப்பை கிளப்பிவிட்டது.


இந்நிலையில் தற்போது ஆந்திராவில் முக்கிய பகுதிகளில் தில் ராஜு துணிவு படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.துணிவு படம் தெலுங்கில் Thegimpu என டப் ஆகி இருக்கிறது. அதனை Vizag மற்றும் Nizam பகுதிகளில் தில் ராஜு தான் விநியோகிக்க போகிறாராம். 






Advertisement

Advertisement