• Jul 25 2025

சக போட்டியாளர்களை இமிடேட் செய்த ஹவுஸ்மேட்ஸ்- வீட்டை விட்டு வெளியேறிய மணிகண்டன் நடந்தது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 6 ஆனது விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் 84ம் நாளில் என்ன நடந்தது என்று பார்ப்போம். இந்த நிலையில் முதலில் ஒரு டாஸ்க் நடைபெற்றது. அதாவது போட்டியாளர்கள் தமக்கு பிடித்த ஒரு பொருளை எடுத்து வரவேண்டும். அந்த பொருளை சரியான காரணம் சொல்லி மற்றவர்களிடம் கொடுக்க வேண்டும்.

அதன் பின்னர் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்கள் மாறி பேச வேண்டும் இதனால் ஒவ்வொருத்தரும் மற்றவர்கள் போல பேசி கலக்கி இருந்தார்கள்.அதிலும் ஏடிகே தனது பெயர் எழுதப்பட்ட பலகையை மணிகண்டனிடம் கொடுத்தார். அதே போல மைனா சூப்பர் ஸ்டார் என்று தரப்பட்ட சம்பியனை ஷிவினுக்கு கொடுத்தார்.


அதே போல ரச்சிதா தனக்கு விருப்பமான பொம்மையை ஷிவினுக்கு கொடுத்தார். பிக்பாஸ் வீட்டில் ஸ்ரோங்கஸ் பிளேயர்ஸ் என கொடுக்கப்பட்ட விருதினை அமுதவாணன் மற்றும் அசீம் ஆகியோர் விக்ரமனுக்கு கொடுத்தனர். அதே போல கதிரவன் தனது லக்கி நம்பர் 7 ஐ அசீமிடம் கொடுத்தார்.

மேலும் மணிகண்டன் லக்கி என்று பொறிக்கப்பட்ட செயினை விக்ரமனிடம் கொடுத்து விக்ரமனுடன் இனிமேல் நல்ல நட்பில் இருக்கப் போவதாகவும் தெரிவித்தார்.


இவ்வாறாக பொருட்கள் பரிமாறிய போது விக்ரமனுக்கே அதிகமான பொருட்கள் கிடைத்தது.  இதன் பின்னர் இந்த வாரம் மணிகண்டன் வீட்டை விட்டு வெளியேறினார்.

மணிகண்டனின் வெளியேற்றமும் ஹவுஸ்மேட்டை கலக்கமடையச் செய்தது. தொடர்ந்து கமல்ஹாசன் முன்னிலையில் வந்த மணிகண்டனுக்கு குறும்படமும் போட்டுக் காட்டப்பட்டதோடு அவரை கமல்ஹாசன் வாழ்த்தி அனுப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement