• Jul 24 2025

வாரிசு 2 எப்போ வரும் சேர்- தில் ராஜுவிடம் ஓபனாக கேள்வி கேட்ட விஜய் - செம குஷியான ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24.12.2022 ஆம் தேதியன்று  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரமாண்டமாக  நடைபெற்றிருந்தது. இதனை சன்டிவி புதுவருட தினத்தில் ஒளிபரப்பாக்கி இருந்தது.

இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.


இந்த நிகழ்ச்சியில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு குறித்து பேசிய நடிகர் விஜய், " இன்னும் நிறைய படங்கள் நீங்கள் செய்யப் போகிறீர்கள். வெற்றிகரமாக நிறைய பணம் சம்பாதிக்க போறீங்க. அதை முன்னாடியே கணிச்சு தான் நம்ம நண்பர் சந்தானம் "தில்"லுக்கு துட்டுன்னு படம் எடுத்தாரு" என விஜய் தில் ராஜுவை குறிப்பிட்டதும் ஒட்டுமொத்த அரங்கமுமே சிரித்தது. 


தயாரிப்பாளர் தில் ராஜூ கூட இதனை கேட்டு சிரித்தபடி இருந்தார். அந்த சமயத்தில் அவரிடம், "வாரிசுக்கு வாழ்த்துக்கள் சார். நான் உங்களுக்கு பிறந்த வாரிசை சொன்னேன். Congratulations சார். வாரிசு 2 எப்ப சார்?. இப்ப நான் படத்தை பத்தி கேட்டேன்" என விஜய் கூறியதும் மீண்டும் ஒருமுறை ஒட்டுமொத்த அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement