• Jul 25 2025

எந்த தைரியத்தில் கேட்கிறீங்க...ஜனனியிடம் அமுதவாணன் கேட்ட கேள்வி வெளியான ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது அக்டோபர் மாதத்தில் ஆரம்பித்து தற்பொழுது 50 நாட்களைத் தாண்டியுள்ளது. இருப்பினும் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் தான் இப்போதுவரை ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்நிகழ்ச்சியிலிருந்து வாரா வாரம் ஒருவர் வெளியேறுவது வழமை. அந்தவகையில் கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வீட்டை வெளியேறியிருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் குயின்ஸி வெளியேறினார். 

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

இதில் ஜனனி, தனலட்சுமி,மைனா நந்தினி ஆகியோர் டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.இவ்வாறுஇருக்கையில் அமுதவாணன் உங்களுக்கு எவ்வளவு பேமன்ற் தரவேண்டும் எனக் கேட்க 5 லட்சம் வேண்டும் என தனம் மற்றும் ஜனனி கூற... எந்த தைரியத்தில் கேட்கிறீங்க என அமுதவாணன் கேட்கின்றார் .அதற்கு தாங்கள் பிக்பாஸ் பிரபலம் எனக் கூற இன்றைய ப்ரமோ கலக்கலாக  வெளியாகி உள்ளது.




Advertisement

Advertisement