• Jul 24 2025

அஜித்தின் வாலி படத்தால் தற்கொலை செய்ய முயன்ற எஸ்.ஜே.சூர்யா... நடந்தது என்ன..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு சில படங்களை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நம்மால் மறக்க முடியாது. அதிலும் குறிப்பாக 90களில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் அப்போது வந்த ஒருசில படங்களை இப்போதும் அதிகம் ரசித்து பார்ப்பார்கள். 

அப்படியான ஒரு படம் தான் 1999-ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான 'வாலி'. இப்படத்தில் அஜித், சிம்ரன், ஜோதிகா, விவேக் என பல நட்சத்திரப் பட்டாளங்களே நடித்திருந்தனர். அதுமட்டுமல்லாது தேனிசைத் தென்றல் தேவா இசையில் வந்த அனைத்து பாடல்களுமே செம ஹிட்டாக அமைந்திருந்தன. 


பாடல்கள் மட்டுமன்றி பாடலுக்கு அமைக்கப்பட்ட நடனம் என அனைத்துமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அந்தவகையில் இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு அடையாறு போட்கிளவுஸில் இருக்கும் ஒரு வீட்டில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால் அப்போது விருந்தாளிகள் வருவதால் அந்த வீட்டினைத் தர முடியாது என வீட்டு ஓனர் மறுத்துள்ளார்.


இதனால் எஸ்.ஜேசூர்யா "இது என்னோட முதல் படம் சார், முதல்நாளே படப்பிடிப்பு நடக்கவில்லை என்றால் சென்டிமென்ட்டாக படத்தையே நிறுத்திவிடுவார்கள்" என எவ்வளவு கெஞ்சி கேட்டும் ஓனர் மறுத்துள்ளாராம்.

அதற்கு உடனே எஸ்.ஜே.சூர்யா "ஓகே சார், நீங்கள் வீடு தர வேண்டாம், நாளை காலையில் ஜன்னல் வழியே பாருங்கள், வெளியில் உள்ள மரத்தில் நான் பிணமாக தொங்குவேன்" என்று சொல்லி இருக்காராம். இதனைக் கேட்டதும் ஓனர் பயத்தில் சம்மதித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement