• Jul 25 2025

சிவகார்த்திகேயன் சத்யாவானது எப்படி?- மாவீரன் படத்திற்காக மேக்கப் போட்டு ரெடியான எஸ்கே- ட்ரெண்டாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் முக்கியமானவர் தான் மடோன் அஸ்வின். இவரது இயக்கத்தில் ஜூலை 14 அன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற திரைப்படம் தான் மாவீரன்.இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின்,நடிகை சரிதா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பும்,யோகி பாபுவின் காமெடியும் படத்திற்கு பிளஸாக அமைந்தது. இப்படம் வெளியான முதல் நாளில் கிட்டத்தட்ட 7 கோடி வரை வசூலித்த நிலையில் தற்பொழுது 50 கோடிக்கு மேல் வசூலித்து விட்டதாக கூறப்படுகின்றது.


இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாவீரன் திரைப்படத்திற்கு மேக்கப் போட்டு ரெடியான வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் SK to Sathya என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே லைக்குகளை குவித்து வருகிறது.

மேலும் இதனை அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு புதிய படத்திலும் அயலான் படத்திலும் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement