• Jul 25 2025

வாரிசு படம் எப்படி இருக்கு?- வெளியாவதற்கு முதலே பார்த்த பிரபலத்தின் முதல் விமர்சனம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் திரையுலக பயணம் ஹீரோவாக நாளைய தீர்ப்பு படத்திலிருந்து துவங்கியது. பிரபல இயக்குநரின் மகனாக திரையுலகில் அவர் அடியெடுத்து வைத்தாலும் அவர் கடந்து வந்த பாதை மிகவும் கரடுமுரடனாது.தன்னை ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகனாக நிலைநிறுத்திக் கொள்ள அவர் மேற்கொண்ட பிரயத்தனங்கள் அதிகமானது.

தொடர்ந்து காதல் படங்களில் நடித்த அவர், ஆக்ஷன், கமர்ஷியல் என காலத்திற்கு ஏற்ப தன்னுடைய திரையுலக பயணத்தை மாற்றி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.தற்போது வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்தப் படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் உள்ளிட்ட அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.


 பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்தப் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.இந்நிலையில், வாரிசு படத்தை சென்சாரில் பார்த்த நபர் படத்தின் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

அதன்படி, வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் நடிப்பு மிரட்டுகிறது. எமோஷனில் சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் கதை ஒன்றும் புதிதல்ல, ஆனாலும் விறுவிறுப்பாக திரைக்கதை நகர்கிறது. கதாநாயகி ராஷ்மிகா மந்தனா திரையில் அழகாக தெரிகிறார்.ரசிகர்கள் நல்ல விருந்து தான் வாரிசு. படத்தின் ஒளிப்பதிவு தந்தைக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் உறவை பற்றியும், தாய்க்கும் மகனுக்கும் இடையே இருக்கும் உறவை பற்றியும் எடுத்துக்காட்டியுள்ளார். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அற்புதமாக இருக்கிறது.


படத்தின் முதல் பாதியை இன்னும் குறைத்து இருக்கலாம். அது படத்திற்கு சற்று குறையாக அமைய வாய்ப்பு. துணை நடிகர், நடிகைகள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். மொத்தத்தில் பைசா வசூல் தான் இந்த வாரிசு.. என கூறி 3.5/5 ரேட்டிங் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement