• Jul 24 2025

வருணின் அம்மாவை கடத்தி வைத்திருந்தது யார் என்ற உண்மையை கண்டு பிடித்த சக்தி- எதிர்பாராத திருப்பங்களுடன் மௌனராகம் சீரியல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சில சீரியல்கள் இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் இதன் முதல் பாகம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இரண்டாவது பாகமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மௌனராகம்.

ஒரு சங்கீத கலைஞர்களின் குடும்பத்தில் நடக்கும் தந்தை மகள் போராட்டத்தை இந்த சீரியல் எடுத்துக் காட்டி தற்பொழுது கூட்டுக்குடும்பம் கடுமையான வில்லத்தனம் என வேறொரு ஜானரில் செல்வதோடு அனைத்து உண்மைகளும் மிகவும் வேகமாகவே தெரிந்து விடுகின்றது.

இதனால் அந்த சீரியல் மிகவும் பரபரப்பாகவே ஓடிக் கொண்டிருக்கின்றது.மேலும் சக்தி தனது விடாமுயற்சியினால் வருணை குணப்படுத்தி விட்டார். இந்த நிலையில் வருணின் அம்மா 15 வருடங்களாக எங்கே இருந்தார் என அனைவரும் கேட்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்கு ஸ்ருதியின் நடவடிக்கைகளை வைத்து சக்தி வருணின் அம்மாவை சீலா தான்கடத்தி வைத்திருந்திருக்கின்றார் என்ற உண்மையை கண்டு பிடிதத்து விட்டதோடு அனைவரிடமும் சொல்லியும் விடுகின்றார். இதனால் வருணின் அப்பா செம கோபத்தில் இருக்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement